நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படி ஆச்சர்யமான ஒரு விஷயம் தான் நமக்கு புல்லரிப்பது. பார்ப்பதற்கு இறகுகள் நீக்கிய கோழியின் தோல் போன்று இருக்கும். இதை கூஸ்பம்ப்ஸ் என்று அழைக்கின்றனர்.

இந்த புல்லரிப்புக்கும் நம் உணர்ச்சிக்கும் இடையே ஏகப்பட்ட சம்பந்தங்கள் உள்ளன. ஆழ்ந்த உணர்ச்சி அனுபவங்களை அனுபவிக்கும் போது இந்த மாதிரி ஏற்படுகிறது.நமது உடலில் உள்ள ஒவ்வொரு முடியின் வேரிலும் அரெக்டர் பில்லி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய தசை சூழ்ந்துள்ளது.

இந்த சிறிய தசை இறுகும்போது, ​​தோலில் சிறிய புடைப்புகள் தோன்றும். இந்த இறுக்கம் நாம் அதிக உணர்ச்சி வசப்படும் போது ஏற்படுகிறது.பிறகு உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளரும் போது புடைப்புகள் மறைந்து விடுகின்றன.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த புல்லரிப்பு தற்காலிகமானதாக இருக்கும். அவை சில விநாடிகளில் போய் விடும்.

நாம் சோகம், பயம், மகிழ்ச்சி அல்லது பாலியல் ஆசை போன்ற தீவிரமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது, ​​உடல் இரண்டு வெவ்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, தோலின் கீழ் உள்ள தசைகளில் மின் செயல்பாடுகளில் அதிகரிப்பு ஏற்படும். இரண்டாவதாக, உங்கள் சுவாசம் கனமாகும். இந்த இரண்டு நிகழ்வுமே நமது தோலில் புல்லரிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here