ஒவ்வொருவருக்குமே புத்தாண்டு ஆரம்பித்ததும் இந்த ஆண்டாவது சிறப்பாக இருக்குமா, நமக்கு சாதகமாக ஏதாவது நடக்க வாய்ப்புள்ளதா, வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா, நிதி நிலைமை இந்த வருடமாவது உயருமா போன்ற கேள்விகள் மனதில் எழும்.அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்கும் மிகவும் அருமையான வருடமாக இருக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.இந்த பதிவினை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: 2020 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வருடம் ஒரு நல்ல கம்பெனியில் உயர் பதவியைப் பெறலாம்.இந்த ஆண்டு வெளிநாடு செல்ல நினைக்கும் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

ரிஷபம்: 2020 ஆம் ஆண்டு தொழில் அடிப்படையில் மிகவும் முக்கியமான ஆண்டாகும். தொழிலில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அந்த மாற்றங்கள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். நீங்கள் புதிதாக வியாபாரம் ஆரம்பிக்க நினைத்தால், அது வெற்றிகரமாக நடக்கும்


சிம்மம்: இந்த வருடத்தின் ஆரம்பம் நன்றாக இருக்கும். உயர் பதவியுடன், வருமான உயர்வும் கிடைக்கும். உங்களது செயல்திறனுக்கு பாராட்டு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த வருடம் வர்த்தகர்களுக்கு லாபகரமாக இருக்கும். இந்த வருடம் உங்களைத் தேடி பல நல்ல வாய்ப்புக்கள் வரும் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி கிட்டும். இந்த வருடம் புதிய பணியைத் தொடங்கலாம்.

விருச்சிகம்:கடந்த ஏழரை வருடங்கள் சனியின் பார்வையால் அல்லல்பட்டு வந்த விருச்சிக ராசியினர், 2020 சனிப் பெயர்ச்சி மூலம் துயரங்களிலிருந்து விடுபட உள்ளீர்கள்.

விருச்சிக ராசிக்கு சங்கடங்கள் தீரும் காலம் தொடங்க உள்ளதால், தொழில், வியாபாரம் வளர்ச்சி காணும்.புதிய ஆண்டு தொழில் அடிப்படையில் நன்றாக இருக்கும். கடினமாக உழைத்தால் எதிர்காலத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

கன்னி: தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் மற்றும் பல புதிய மாற்றங்கள் வரும். இந்த வருடம் ஒரு புதிய கம்பெனியில், நல்ல பதவி மற்றும் சம்பளத்தில் சேரலாம். இந்த வருடம், இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இந்த வருடம் நல்ல வருமானம் சாத்தியம் என்பதால் வர்த்தகர்களுக்கு நன்றாக இருக்கும். புதிய வியாபாரத்திலும் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம்.


தனுசு: வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலுமே நல்ல பலன் கிடைக்கும். புதிய புராஜெக்ட்டுகளில் வேலை செய்து, வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது. இந்த வருடம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் என்பதால், உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மாணவர்களுக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். ஆனால் நடுப்பகுதியில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here