இன்றைய இணைய உலகத்தில் சினிமாவில் இடம்பிடிப்பவர்களும் எண்ணிக்கை அதிகமாகவிட்டது. ஆனால் ஒரு முன்பெல்லாம் சினிமாவில் இடம்பிடிப்பது என்றால் சாதாரண விஷயமில்லை அதற்காக கடின முயற்ச்சியை மேற்கொண்டு வந்த நடிகர்கள் ஏராளம்.

அப்படி, ஆனால், பாலிவுட் சூப்பர் ஹீரோ என்று அழைக்கப்படும் ஷாருக் கானும் இதே தொலைக்காட்சி பெட்டிக்குள் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் தான் என்பது நவீன தலைமுறையினர் பலரும் அறியாத ஒன்று.

ஷாருக்கான் அவர்கள், இந்தியாவின் தலைநகரான புது தில்லியில், நவம்பர் மாதம் 2 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில், முஸ்லீம் தம்பதியரான தாஜ் முகமது கான் மற்றும் லதீஃப் பாத்திமாவிற்கு மகனாகப் பிறந்தார்.அவரது தந்தை, இந்தியப் பிரிவினைக்கு முன்பே, பாக்கிஸ்தானில் உள்ள பெஷாவரிலிருந்து இந்தியா வந்து குடியேறிய ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார்.

1988ம் ஆண்டு ‘தில் தரியா’ எனும் நாடகத்தில் தான் ஷாருக் கான் முதன் முதலாக நடித்தார். இவர், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார்.

1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

இடியட், உமீத், வாக்லே கி துனியா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ஷாருக், ஆங்கில தொலைக்காட்சி தொடரான Which Annie Gives It Those Ones என்ற நாடகத்திலும் நடித்திருக்கிறார். தவிர, டிவி ஷோக்களில் தொகுப்பாளராகவும், பணியாற்றி இருக்கிறார்.

அப்போதெல்லாம், நாம் பாலிவுட்டையே ஆளப்போகிற ராஜாவாகப் போகிறோம் என்பதே ஷாருக்கிற்கு தெரியாது. ஏன், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே அப்போது ஷாருக்கானுக்கு கிடையாதாம்.

உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். இதனால் இவருக்கு, ‘தி வேர்ல்ட்’ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’ என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011ல் வழங்கி கௌரவித்தது.

30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அவர், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’, சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளாரகவும் இருந்து வருகிறார்.

ரஜினி, கமல், அஜித், விஜய் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை, தங்கள் வாழ்வில் எவ்வளவு போராட்டங்களை, அவமானங்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள் என்பதை, போலவே ஷாருக்கானும் பல துன்பங்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here