ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவை போலவே இரவு உணவும் மிகவும் அவசியமானவை.இரவு உணவுதான் நீங்கள் அடுத்தநாள் உற்சாகமாய் எழ தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதேபோல நீங்கள் இரவில் உண்ணும் சில உணவுகள்தான் உங்கள் எடை அதிகரிப்பிற்கும் வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.எனவே இரவு உணவு சாப்பிடும்போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம்.

காரமான உணவுகள் சாப்பிட கூடாது : மசாலாப் பொருட்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இரவு நேரங்களில் இம்மாதிரியான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது தான்.ஆனால் சில மசாலா பொருட்களை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மிளகாய் சேர்த்துள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதுவே ஆரோக்கியமான மசாலாப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து இரவு நேரத்தில் உட்கொண்டால், உடலின் வெப்பத்தைப் பராமரிக்கும் மற்றும் பசியும் பராமரிக்கப்படும்.எனவே இரவு நேரத்தில் பட்டை, சோம்பு, வெந்தயம், ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களை வேண்டுமானால் இரவு சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகள்:காய்கறிகள் இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்தவை. எனவே அதனை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் உங்கள் எண்ணம் தவறானது. ஏனெனில் காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது, இவை உங்கள் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாக நகரக்கூடியயவை.இது வழக்கமாக நீங்கள் இரவில் விழித்திருக்கும் நேரத்தை விட அதிக நேரம் விழித்திருக்க வைக்கும்.

இதனால் அதின பசி எடுக்கும். மீண்டும் எதையாவது சாப்பிடுவீர்கள். அதனால் உடல் எடை அதிகரிக்கும். முக்கியமாக கீரை போன்றவற்றை இரவில் எடுத்து கொள்ள வேண்டாம்.

சிப்ஸ்: சிப்ஸ் மற்றும் அதனை போன்ற நொறுக்குதீனிகள் அனைவர்க்கும் பிடித்த ஒன்று. இரவு உணவுடன் இத்தனையும் சேர்த்து சாப்பிடுவது பலரின் பழக்கமாக கூட இருக்கலாம். ஆனால் இதனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சிப்ஸ்களில் உள்ள மோனோசோடியம் குளூட்டமேட் என்னும் பொருள் உங்கள் தூக்கத்தை கெடுக்கக்கூடிய ஒன்று மேலும் இது இரவுநேரத்தில் நெஞ்செரிச்சலை உருவாக்கக்கூடும்.


நூடுல்ஸ்: பசி அதிகமாக இருக்கும் நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிடுவது என்பது மிகச்சரியான ஒரு யோசனை ஏனெனில் இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிடுவதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் கொழுப்பு நிறைந்த இந்த உணவு நீங்கள் தூங்கும்போது உங்கள் எடையை அதிகரிக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யும். அதுமட்டுமின்றி இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் செரிமானம் அடையவும் நிறைய நேரம் தேவைப்படும். எனவே ஆரோக்கியமான வேறு உணவை சாப்பிடுவது நல்லது.

ஐஸ்க்ரீம்: இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு மோசமான பழக்கம் இரவு சாப்பிட்டவுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது. ஐஸ்க்ரீமில் கொழுப்பு மற்றும் சர்க்கரை இரண்டுமே அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இவை இரண்டும் செரிமானம் அடைய போதுமான உடல் உழைப்போ, நேரமோ இரவில் நீங்கள் உங்கள் செரிமான மணடலத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் உங்களின் எடை அதிகரிப்பதோடு இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

பீட்சா: பெரும்பாலும் இரவு நேரத்தில் நாம் பீட்சா சாப்பிடமாட்டோம். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையும்போது நம் வாய் சும்மா இருக்குமா? எனவே ஆசைப்பட்டு சிறிது பீட்சா சாப்பிட்டாலும் அது உங்களுக்கு சுவையுடன் எடை அதிகரிப்பையும் சேர்த்தே வழங்கும். இதில் உள்ள கொழுப்பு மற்றும் மசாலா பொருட்கள் உங்களுக்கு நெஞ்செரிச்சலையும் சேர்த்து ஏற்படுத்தும்.

தானியங்கள்: தானியங்களுடன் ஒரு நாளை துவங்குவது வேண்டுமானால் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் இரவு நேரத்தை தானியங்களுடன் முடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் செரிக்காது. எனவே உங்களின் இரவு தூக்கத்தை மறந்துவிட வேண்டியதுதான்.

சாக்லேட்: தூங்க செல்லும் முன் காபி குடிப்பது ஆரோக்கியமற்றது என்பது தெரிந்த பலருக்கும் சாக்லேட் சாப்பிடுவதும் ஆரோக்கியமற்ற ஒன்று என்பது புரிவதில்லை. ஏனெனில் காபியில் இருப்பது போலத்தான் சாக்லேட்டிலும் காஃபைன் உள்ளது. எனவே இரண்டையுமே தவிர்ப்பதுதான் ஆரோக்கியதிற்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here