சினிமா துறைக்குள் ரீ என்ட்ரி கொடுத்தமை பற்றி அண்மையில் நடிகர் பார்த்திபன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.என் வாழ்க்கையில் மறுபடியும் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுக்க என் மகள் கீர்த்தனா தான் காரணம்.அவளுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் தான் எனக்கு ஆறுதலாக உள்ளது.

என் மூத்த மகள் அபிநயா உயிர், இரண்டாவது மகள் கீர்த்தனா என் அறிவு, என் மகன் அன்பு. இப்படித் தான் என் குழந்தைகளை நான் பிரித்து வைத்திருக்கிறேன். மூன்று பேரும் தான் என்னுடைய உலகம் என்றும் கூறியுள்ளார்.

என் மகள் கீர்த்தனா எனக்கு தெய்வம் தந்த பூ போல. அவளின் கல்யாணத்தின் போது நான் அழ கூடாது என்று ஒரு மாதமாக பயிற்சி செய்து இருந்தேன். ஆனாலும், என்னால் அழாம இருக்க முடிய வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நடிகர் பார்த்திபன் ஹீரோவாக நடித்த முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடம் மிகுந்த மகிழ்ச்சியோடு நதி போல ஓடிக் கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கை திடீரென தடுக்கி விழுந்தது.பிறகு பல்வேறுகாரணங்களுக்காக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று தனித்தனியாக வசிக்க ஆரம்பித்தனர்.

விவாகரத்தின் பின்னர் சீதா சுரேஷ் என்பவரை காதலித்து மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், சீதாவிடம் இருந்து பிரிந்து தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் பார்த்திபன் இன்றும் குடும்பத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.மேலும், பிரிந்த மனைவியை பற்றி பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறிய விடயம் இது,


ஒரு முத்தத்தின் சத்தத்தைக்கூட ஒரு கோடி வார்த்தைகளில் நான் கோத்துக்கோத்து அழகாக, எதிர்பாராத, மிக வித்தியாசமான வார்த்தைகளில் அவளை நான் புகழ்வது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எதை இழந்தாலும் அவளை இழக்கக் கூடாது என்கிற என் முனைப்பு அவளுக்குச் சிறிய பரிதாபத்தை ஏற்படுத்தியது. நாங்கள் முதன்முதலில் தேனிலவுக்குப் போனது டெல்லிக்கு. இந்தியாவின் உயர்ந்த விருதைக் கொண்டுவந்து அவள் கால்களில் ஒப்படைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அவளுடைய பாதங்களுக்கு ஈரத்தோடு முத்தமிட்டது. அதெல்லாம் அவளைப் பரவசப்படுத்தும் என நினைத்து என்னை நான் பரவசப்படுத்திக்கொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று மீண்டும் அதனை நினைத்து பார்க்கும் போது தன் மனைவியின் காதலுக்காகவே வாழ்ந்த பார்த்திபனின் அழகான வாழ்க்கை பலரின் கண்பட்டு சிதைந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here