டென்னிஸ் போட்டியில் விளையாட நான்கே மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ளார் சானியா மிர்சா.இந்தியா டென்னிஸ் நாயகியான சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்ட பின்னும் இந்தியாவுக்காக போட்டிகளில் விளையாடி வந்தார்.

32 வயதான சானியா மிர்சா, குழந்தைப் பிறப்புக்குப் பிறகு டென்னிஸ் வாழ்க்கையில் 2-வது இன்னிங்ஸுக் குத் தயாராகி வருகிறார். தினமும் 4 மணி நேரம்பயிற்சி எடுத்து தனது உடல் எடையை 26 கிலோ வரை குறைத்துள்ள அவர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், ”எனக்கு உறுதுணையாக இருந்த எனது தாய் மற்றும் சகோதரிக்கு நன்றி. ஒலிம்பிக் போட்டிகள் எனது மனதில் உள்ளன. ஆனால் அவை எனது உடனடி இலக்கு அல்ல, நான் கனவு கண்ட அனைத்தையும் டென்னிஸில் அடைந்து விட்டேன். அடுத்துகிடைப்பதெல்லாம் போனஸ்தான்.

இந்த மாதம் அல்லது ஜனவரியில் மீண்டும் சர்வதேச டென்னிஸுக்கு வருவேன். என் மகன் இஷான் எங்களுக்கு கிடைத்த ஆசிர்வதிக்கப் பட்ட செல்வம். எனது மகன்தான் நான் மீண்டும் உடற்தகுதியை பெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கிறான். யாருக்கும் எதையும் நிரூபிக்க மீண்டும்வரவில்லை. திரும்பி வருவதற்கான ஒரே காரணம், நான் விளையாடுவதையும் போட்டியிடுவதையும் விரும்புகிறேன்.

இன்னும் 2 மாதங்களில் இது தெளி வாகிவிடும். உடல் அளவில் தயாராக இல்லாதபோது போட்டியிட விரும்பமாட்டேன். திரும்பி வந்து காயமடைவதில் எந்த அர்த்தமும் இல்லை. மீண்டும் வருவதற்கான போதுமான சுய உத்வேகம் இருக்கிறது. செரீனா போன்றோர் குழந்தை பெற்ற பிறகு கிராண்ட் ஸ்லாம்களில் விளையாடி வருவது சிறப்பான விஷயம்.

இது வெளிப்படையாக மிகவும் ஊக்கமளிக்கிறது. சர்வதேச அளவில் வலுவாக விளையாட இன்னும் சிறிது கால அவகாசம் தேவை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here