யானைகளும் புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு நடக்க பாதை கூட இல்லாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்கள்.அத்தைகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நம்பலாம். ஆனால், வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா ஆனால் அப்படியும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு குடும்பம்.

இது வெளிநாடுகளில் இல்லை நாம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இருந்து கேரளா வரைக்கும் பரவி இருக்கும் பொதிகை மலைத் தொடரில் வாழும் கனபழக்கூடியினரின் வாழ்க்கை.

இப்பொழுது ஐந்து குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால் இவர்கள் அனைவரும் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஒரே தாய் வாயிற்றில் இருந்து பிறந்தவர்கள் தான் கனபழக்கூடு வழக்கத்தின் படி குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆகிவிட்டால் தனி குடி போய்விடுவார்களாம்.

அங்கு இவர்களின் தாய்யும் தனியாக வசித்து வருகிறார் அவருக்கும் நூற்றி ஐந்து வயது இருக்கும் அவருடன் ஒரு வேட்டை நாயையும் வளர்த்து வருகிறார்.1917 யில் செங்குஞ்சி மரங்களை பயிரிடவும் ஏலக்காய் எஸ்டேட் உருவாக்கவும் ஆங்கில வனத்துறை முடிவெடுத்தது. அதற்காக கனி என்ற குடியிருப்பில் இருந்து பத்து குடும்பங்களை அழைத்து வந்து இஞ்சி குடியில் குடி அமர்த்தினார்கள். அப்பாடி அழத்து வரப்பட்ட குடும்பங்களில் ஒன்று தான் களியாம்மாவின் குடும்பம்.

அப்போது அவருக்கு 5 முதல் 8 வயது இருந்து இருக்கலாம் என தோறயமாக சொல்கிறார்கள். அப்போது களியம்மா கூறுகையில் செங்குஞ்சி தோட்டத்திற்கு 100 ஆண்டு வரை ஓப்பந்தம் போடபட்டு இருந்தது. அந்த தோட்டத்தின் 100 ஆண்டு ஓப்பந்தம் சென்ற ஆண்டு 2017 யில் தன் நிறைவடைந்தது.

மீண்டும் வனத்திற்குள் யாரும் இதுமாதிரி சொல்லி கொண்டு வர கூடாது என அங்கு இருந்த எலக்காய் தோட்டங்களை நாங்கள் அழித்து விட்டோம். செங்குஞ்சி மரங்களை மட்டும் நூற்றாண்டு அடையாளமாக விட்டுவிட்டோம். களியம்மா அதை தான் குழந்தையாக இருக்கும் போது பயிரிட்டதாக கூறுகிறார். அங்கு வாழ்ந்த மாற்ற குடும்பங்கள் எல்லாரும் மலையில் இருந்து கிராமத்திற்கு சென்று விட்ட நிலையிலும் களியம்மா குடும்பம் மட்டும் அந்த காட்டில் வசித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here