ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை.இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.

ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான அதிர்ஷ்ட எண்கள் கண்டறியப்படுகிறது. 2020ஆம் ஆண்டு கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. முக்கிய கிரகங்கள் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பொருளாதார நிலை அபரிமிதமான வளர்ச்சி அடையும்.அந்த வகையில் ஒவ்வொரு எண்ணுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சூரியன் ஆதிக்க எண் 1

2020ஆம் ஆண்டு 1ஆம் எண் காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. சிறப்பான ஆண்டு காரணம் சூரியன் ஆதிக்கம் கொண்ட இந்த எண்ணிற்கு 2020 நன்மைகளையே செய்யும்.தொழிலில் மேன்மை கிடைக்கும், பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேரும் வயது முதிர்ந்தவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கும்.

சந்திரன் ஆதிக்க எண் 2

சந்திரனை ஆதிக்கமாகக் கொண்ட 2ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அமோகமான ஆண்டாக அமைந்துள்ளது. திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் புத்திர பாக்கியம் தாமதப்பட்டவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு மகத்தான ஆண்டாக அமையும் கூத்தனூர் சென்று சரஸ்வதியை தரிசனம் செய்து விட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

குருவின் ஆதிக்க எண் 3

குருவின் ஆதிக்கம் நிறைந்த 3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு சற்றே சோதனைகள் நிறைந்த ஆண்டுதான். பயணங்கள் செல்லும் போது விநாயகரை வணங்கி விட்டு செல்லுங்கள். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். ஆஞ்சநேயரை தரிசனம் செய்வது சிறப்பு.

ராகுவின் ஆதிக்கம் நிறைந்த 4

ராகுவின் ஆதிக்கம் நிறைந்த 4ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020 செழிப்பான ஆண்டு. பலதரப்பட்ட வருமானங்கள் வரும் உழைப்பு அதிகமாகும். உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். இந்த ஆண்டு சுபமான காரியங்களில் முதலீடு செய்யலாம். சொத்துக்கள் வாங்கலாம். வீடு மனை வாங்கலாம்.

புதனின் ஆதிக்கம் நிறைந்த 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். சுப விரையங்கள் நடைபெறும். குபேரன் அருள் கிடைக்கும். புதன்கிழமைகளில் திருவெண்காடு சென்று வணங்கி வரலாம்.

சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த 6

சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள். இனிமையானவர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல விமோசனம் கிடைக்கும். வெளிநாடுகளில் நல்ல வேலை கிடைக்கும்.

கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண் 7

கேதுவின் சாரம் பெற்ற 7 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டில் சோதனைகள் வந்தாலும் அதனை சாதனைகளாக மாற்றலாம். திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனை வழிபடலாம். கேதுவின் நாயகன் சித்திரகுப்தனை வணங்குவதால் வருடம் முழுவதும் சாதனைகள் படைக்கலாம்.

சனியின் ஆதிக்கம் நிறைந்த எண் 8

எட்டாம் எண் மகத்தான எண் சக்தி வாய்ந்த எண் எனவே இந்த எண் காரர்களுக்கு அற்புதமானதாக அமையும். 8ஆம் எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்களுக்கு சனியின் பார்வையால் 2020ஆம் ஆண்டு நன்மைகள் தீமைகள் சரியாக கலந்து வரும். சனியும் ராகுவும் இணைவதால் பல மாற்றம் ஏற்படும்.

செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த எண் 9

செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த 9 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொற்காலமான ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய வெற்றிகள் கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கும், காவல்துறை, தீயணைப்புத்துறை, ராணுவத்துறையில் இருப்பவர்களுக்கு மகத்தான ஆண்டாக அமையும் வெற்றியை நோக்கி செல்வார்கள். எதற்கும் டென்சன் ஆகாதீங்க கோபத்தை கட்டுப்படுத்தினால் நிறைய வெற்றிகள் தேடி வரும். பதவி உயர்வு வரும். பெண்களுக்கு சக்தி நிறைந்த ஆண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகளும் வருமானமும் தேடி வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here