பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் ஹீரோயின் துளசியை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.இன்றைக்கும் அவர் அழகு சீரியலில் வந்து இல்லத்தரசிகளிடம் பேசி விட்டு செல்கிறார்.

ஸ்ருதிராஜ் ஏற்கனவே சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர்தான். வாய்ப்பு கிடைக்காமல் போகவே தென்றல் தொடர் மூலம் சின்னத்திரையில் துளசியாக அறிமுகமானார்.தற்போது 40 வயதை நெருங்கி கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் அவருக்கு 40வது பிறந்த நாள் கொண்டாடவுள்ளது.

தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதி ராஜ் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அவரிடம் எப்போது கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறீர்கள், என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப் பட்டது.

அதற்கு பதில் அளித்த ஸ்ருதி, இதுவரை என் வாழ்க்கையில் எதையும் பிளான் செய்தது கிடையாது.அப்படி பிளான் செய்தாலும் அது சரியாக நடந்தது இல்லை. கல்யாணமும் அப்படி தான் எனக்கு எந்த பிளானும் இல்லை. வீட்டில் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 40 வயதாகியும் கல்யாணம் குறித்து பிளான் எதுவும் செய்யாமல் இருப்பது ஸ்ருதி மட்டும் அல்ல, இவரைப் போன்ற நிலையில் பல நடிகைகள் இருக்கிறார்கள் என்பது தான் பெரும் சோகம். இது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தற்போது அவர் அழகு சீரியலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். சமூகவலைத்தளத்தில் புகைப்படம் பதிவிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியுடன் 40பது வயதை நெருங்கும் நடிகை என்றே கூறமுடியாது. இன்றும் இளமையாகவே இருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here