அவர் மட்டும் தான் நாட்டுப்புற பாடகரா..? குப்புசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த செந்தில் கணேஷ்..!

பல வித்யாசமான நாட்டுப்புற பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியர்கள்.. மேலும் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பும் பெரிய அளவில் கிடைத்தது.

சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க படங்களில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்து, செந்தில் – ராஜலட்சுமி தற்போது வளர்ந்து வரும் பாடகர்களில் முக்கிய நாட்புற பாடகர்களாக வலம் வருகின்றனர். ஆனால் இவர்கள் இரட்டை அர்த்தத்தை கொண்டு பாடுகிறார்கள் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நாட்டுபுற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி செந்தில் – ராஜலட்சுமி தம்பதியனரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

அதாவது, “பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம் கலந்ததாகவும், ஆபாசமாகவும் உள்ளது. மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். இதையெல்லாம் யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்” என புஷ்பவனம் குப்புசாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

மேலும் அவர், இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா? பேசாமல் பாடுவதை நிறுத்திவிடலாமா என்று கூட யோசிக்கிறேன். இவர்களை பார்க்கும்போது நான் பாடுவதையே நிறுத்திவிடலாமா என்றும்கூட தோன்றுகிறது என கடுமையாக பேசி இருந்தார். தற்போது புஷ்பவனத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள செந்தில் கணேஷ். “பாடல்களில் இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்கள் எங்கே இருக்கிறது. நாங்களும் எங்கள் மூத்த கலைஞர்கள் எழுதிய பாடல்களை பாடியுள்ளோம். கலைஞர்கள் பாடும் போது அதில் ஆபாச வார்த்தைகள் இருந்தால் நாங்கள் அதனை மாற்றி பாடி விடுவோம். என்று பதிலடி கொடுத்துள்ளார் செந்தில் கணேஷ்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *