திருமணமான பெண்ணை வேறொருவரின் ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இளம் பெண்! நேரலையில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேரலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை கண்ணீருடன் கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. திருமணம் முடிந்து குழந்தைகளுடன் இருக்கும் இவர் பேஸ்புக் நேரலை ஒன்றில் நான் தற்கொலை செய்வதற்கு யார் காரணம்? என்பதை கண்ணீருடன் கூறியுள்ளார். அதில், எனது பெயர் கார்த்திகா. நான் காரைக்குடியில் உள்ள தனியார் ஷோரூமில் பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களான அமுதா, வைரவன், சபரி, செபாஸ்டின் ஆகிய நால்வரும் சேர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். என்னிடம் வந்து ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை கேட்டு உள்ளனர்.

இந்த இளைஞர்களுக்கு ஒத்துழைக்கும் ஒரு பெண் ஒருவர் என்னிடம் வந்து, நீ தற்போது அவர்களின் ஆசைக்கு இணங்கு, அவ்வாறு இணங்கினால் நீ வாழ்க்கையில் பெரிய இடத்திற்குச் சென்று விடலாம் என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்‌. இது மட்டுமல்லாது எனது கணவருக்கு தொடர்பு கொண்ட அமுதா, எனக்கு முறையற்ற பழக்கம் நிறைய ஆண்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் என்னிடமிருந்து விலக்கம் அடைய துவங்குகிறார். இவர்களின் கொடூர எண்ணத்தாலும் பேச்சுக்களாலும் நான் கடுமையான மன வேதனை அடைந்துள்ளேன். அந்த அமுதா பெண் உண்மையிலே தவறான பழக்கம் உடையவராவார்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து எனது வாழ்க்கையை சீரழிக்க முடிவு செய்து இந்த செயலை அரங்கேற்றி உள்ளனர். இதனால் நான் கடுமையான மன வேதனையில் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துக் கொள்கிறேன். என்னை உங்களின் தாயாக சகோதரியாக தங்கையாக நினைத்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பி எனது இறுதி முடிவுகள் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி கடைசியாக வாங்கி வைத்திருந்த விஷத்தை அருந்துகிறார். இது குறித்த வீடியோ பதிவுகள் வெளியான நிலையில், தற்போது வரை இந்த பிரச்சனை குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனரா என்பது குறித்தும் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *