என்னை நாசம் செய்யறாங்க-காப்பாத்துங்க-அடைச்சி வச்சிருக்காங்க-பேராசிரியை கதறல் – பரபரபான வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பப்பீலா என்கின்ற இளம்பெண் உதவி பேராசிரியராக கடந்த ஒன்றரை வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவர் அந்த கல்லூரியில் இருக்கக்கூடிய பொது மேலாளர் உதவி முதல்வர் உட்பட சிலர் மீது பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை முகநூல் வாயிலாக வீடியோவாக பதிவு செய்தி உள்ளார்.

மேலும் இந்த கல்லூரியில் மனிதத்தன்மையற்ற முறையில் மிகவும் கீழ்த் தரமாகவும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு தன்னை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் என்னை யாராவது காப்பாற்ற வேண்டும் அதேபோல் எனக்கு உரிய நீதியும் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் மேலும் தன்னை தற்கொலை செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து பப்பீலா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் நிர்வாகத் துறையில் பணிபுரியும் லட்சுமிகாந்தன் கல்லூரி பொதுமேலாளர் சசிகுமார்,செந்தில்குமார்,துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன்,துப்புரவு பணியாளர் முனியம்மாள் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வைரல் ஆகும் அந்த வீடியோ கீழே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *