கைலாச நாட்டு அதிபர் நித்தியானந்தாவுக்கு இளைஞர்களின் மனதை உருகவைக்கும் கோரிக்கை கடிதம்…!!

செய்தி

கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு நித்தியானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதுடன் அதுதொடர்பான புதுப்புது விஷயங்களை பகிர்ந்து வருகிறார். மீபத்தில் கூட கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி ஒருவர் கடிதம் எழுதிய நிலையில், தற்போது 1990 ஆண்டுகளில் பிறந்தவர்கள் கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமண வேண்டுகோள் என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில், அனுப்புதல் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுதல் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அதில் சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம். தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதம் வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *