எஸ்பிபி சிகிச்சைக்கு மருத்துவமனை வசூலித்த கட்டணம் தொடர்பாக எழுந்த சர்ச்சை! மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

செய்தி

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மருத்துவ செலவுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கட்டியது போல தகவல் வெளியான நிலையில் இதற்கான விளக்கத்தை எஸ்.பி.சரண் அளித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பி மருத்துவச் செலவு குறித்தும் எம்ஜிஎம் மருத்துவமனை குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவலுக்கு எஸ்.பி.சரண் முகநூல் வாயிலாக விளக்கமளித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியம். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளவும் செய்தார். ஆனாலும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததன் காரணமாக சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சமூக வலைதளங்களில் சில தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகின்றன. இந்த நிலையில் தற்போது இதுகுறித்து எஸ்பிபி சரண் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அப்பா எஸ் பி பி பி-க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், செலவுகள் குறித்து எம்ஜிஆர் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடும்.

எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு நானும் என் குடும்பமும் மிகவும் கடமைப்பட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளார். தயவு செய்து தவறான தகவல்களை பரப்பி எங்களை காயப்படுத்தாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இவர் எஸ்பிபியின் உடலை அடக்கம் செய்த தாமரைபாக்கத்தில் அவருக்கு நினைவு இல்லம் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பாக பரவும் தவறான செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக, மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார். மறைந்த எஸ்பிபி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனை வசூலித்த கட்டணம் தொடர்பில் வாட்ஸ் அப்பில் பல்வேறு வதந்திகள் பரவியது. அதாவது பெரிய தொகையை செலுத்த முடியாமல் எஸ்பிபி குடும்பத்தார் அவதிப்படுவதாக வதந்தி பரவி சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த எஸ்பிபி குடும்பத்தினருக்கு மருத்துவமனை இரண்டு வாரங்களுக்கு முன்பு மேலும் பணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த மருத்துவமனை மிகச் சிறந்த சிகிச்சையை அளித்துள்ளதாக கூறியுள்ள அவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவ செலவு தொடர்பாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் இதை மேலும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *