மோகன்லால் கொடுத்த பிரியாணியால் கோ மாவிற்குச் சென்ற நடிகைகள்!

Uncategorized

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பில் பங்கெடுத்து வரும் மோகன்லால் சக நடிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்துள்ளார். கேரளாவின் தொடுபுழா பகுதியில் த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், அன்சிபா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் மோகன்லால் தான் டயட்டில் இருந்தாலும் தன்னுடைய சக நடிகர்களுக்காக சுவையான பிரியாணி விருந்தளித்துள்ளார். மோகன்லாலின் அன்பால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் மோஹன்லாலின் மகளாக நடிக்கும் எஸ்தர் அனில் வெளியிட்டுள்ள பதிவில் “மோகன்லால் டயட்டில் இருந்தாலும் எங்களுக்கு சுவையான பிரியாணி கிடைத்தது… அன்ஷிபாவும் நானும் சாப்பிட்டுவிட்டு கோமாவுக்குச் சென்று விட்டோம். மீனா அவர்கள் அறையில் நலமாக இருப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த மீனா “நானும் கோ மாவில் தான் இருக்கிறேன்.

இவ்வளவு குறுகிய காலத்தில் சுவையாக விருந்து கொடுத்ததற்கு மோகன்லாலுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அதே நடிகர்களுடன் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.  அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள்

ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா

அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *